அழகுக்கு குறிப்புகள் – கருமையான நீண்ட தலை முடிக்கு

கருமையான நீண்ட தலை முடிக்கு

இப்போதெல்லாம், இளம் வயதிலேயே பலருக்கு நரைமுடி வந்து விடுகிறது.

இதற்கு சுற்றுச்சூழல், உணவுப் பழக்கவழக்கங்கள், மனஅழுத்தம், பரம்பரை போன்றவை முக்கிய காரணங்களாக இருந்தாலும், முடியை சரியாக பராமரிக்காததும் ஒரு காரணமாக கருதப்படுகிறது.

மேலும் பலரும் நரைமுடி மறைய பல்வேறு ஹேர் டைகளை வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால் அதனால் வெள்ளை முடி தற்காலிகமாக மறையுமே தவிர, நிரந்தரமாக மறையாது. அதுமட்டுமின்றி, நரைமுடி மறைய (White Hair Solution) கண்ட கண்ட பொருட்களை வாங்கி தடவுவதால், பல்வேறு அலர்ஜிகளும் ஏற்படுகின்றன. இதனால் முடியும் அதன் தன்மையை இழந்துவிடுகிறது.

நரைமுடி மறைய (White Hair Solution) – தேவைப்படும் பொருட்கள்:
அரிசி கழுவிய தண்ணீர் – ஒரு கப்
திரிபலா சூரணம் – இரண்டு ஸ்பூன்
நெல்லிக்காய் பொடி – இரண்டு ஸ்பூன்
விட்டமின் இ மாத்திரை – ஒன்று
நரைமுடி மறைய – செய்முறை:
நரைமுடி கருமையாக ஒரு கப் அரிசியை எடுத்து கொள்ளுங்கள், அவற்றில் தண்ணீர் ஊற்றி 24 மணி நேரம் நன்றாக ஊறவைத்துக்கொள்ளுங்கள்.

24 மணிநேரம் அரிசி நன்றாக ஊறியதும், அந்த நீரை ஒரு கிண்ணத்தில் தனியாக எடுத்துக்கொள்ளுங்கள்.

பின்பு அந்த நீரில் இரண்டு ஸ்பூன் திரிபலா சூரணம், இரண்டு ஸ்பூன் நெல்லிக்காய் பொடி மற்றும் ஒரு விட்டமின் இ மாத்திரை ஆகியவற்றை ஒன்றாக கலந்து தலையில் தடவுங்கள். பின்பு ஒரு மணி நேரம் கழித்து தலை அலச வேண்டும்.

எனவே நரைமுடி மறைய இந்த முறையை வாரத்தில் ஒரு முறை என்று தொடர்ந்து செய்து வர நரைமுடி கருப்பாக மாறும் (white hair solution), முடி உதிர்வு பிரச்சனை நீங்கும், முடி கருப்பாக மற்றும் அடர்த்தியாக வளரும்.

நரைமுடி கருமையாக :-
நரைமுடி மறைய வெந்தயத்தை அரைத்து பேஸ்ட் செய்து தலையில் தடவையோ அல்லது இரவு தூங்குவதற்கு முன் வெந்தயத்தை நீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் அந்த நீரை எடுத்து தலைக்கு அலசியோ வந்தால் நாளடைவில் நரைமுடி கருமையாக மாறும்.

உதிர்ந்த முடி மீண்டும் வளர வெங்காயம் சாறு உதவுகிறது..!

நரைமுடி வர காரணம்..!
சரியான உணவு பழக்கவழக்கம் இன்றி இருப்பது. சரியான ஊட்ட சத்துக்கள் கிடைக்காமல் தலை முடி வெண்மை நிறத்தில் மாற (white hair problem) ஆரம்பிக்கும்.

உடலில் சுரக்கும் ஹார்மோன்களின் வளர்ச்சி குறைந்தாலோ அல்லது ஏதேனும் கோளாறுகள் ஏற்பட்டாலோ நரைமுடி வர (white hair problem) காரணமாகும்.

அதேபோல் அதிகமான வேதி பொருட்கள் இருக்கும் ஷாம்பு மற்றும் இதர பொருட்களை பயன்படுத்துவதால் தலை முடி பாதிக்கப்பட்டு நரை முடி (white hair problem) வருகிறது.

ஹைட்ரஜன் பெராக்ஸைடு அதிகம் இருக்கும் உணவுகளை உண்பதால் அது முடிகளை பாதித்து கருமை நிறத்தை மாற்றி வெண்மை நிறத்தை கொடுக்கிறது மற்றும் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் வாய்ப்பும் (white hair problem) இருக்கிறது.

வைட்டமின்கள் மற்றும் ஊட்ட சத்துக்களின் குறைபாடினாலே முடிகளில் அதிக பாதிப்புகள், வெடிப்புகள் ஏற்பட்டு பிரச்சனை (white hair problem) வருகிறது.

தலைமுடி நல்லா அடர்த்தியாகவும், கருமையாகவும் வளர வேண்டுமா !! இதோ அதற்கான…

நரைமுடி கருமையாக உணவு :
நரைமுடி கருமையாக உணவு உணவில் கருவேப்பிலையை அதிகளவு சேர்த்து கொண்டு வந்தாலே போதும் நரைமுடி கருமையாக மாறிவிடும். அதேபோல் தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கையளவு கருவேப்பிலையை பச்சையாக மென்று சாப்பிட்டு வரலாம் இவ்வாறு செய்வதினால். முடி உதிர்வு பிரச்சனை நீங்கும். முடி அடர்த்தியாக வளரும், குறிப்பாக நரை முடி பிரச்சனை சரியாகும்.

Be yourself; Everyone else is already taken.

— Oscar Wilde.

This is the first post on my new blog. I’m just getting this new blog going, so stay tuned for more. Subscribe below to get notified when I post new updates.

Published by Health Tips - அழகுக் குறிப்புகள்

I like natural life. my blogging is about Tips for healthy life. அழகுக் குறிப்புகள்

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started